உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக் கல்லுாரி சார்பில், என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு விழிப்-புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இக்கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்-சிக்கு, கல்லுாரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கு விளக்கினர். தொடர்ந்து, தர்மபுரி நான்கு ரோடு வந்த மாணவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ராஜன், செஞ்சிலுவை மற்றும் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்-பாளர் சந்திரசேகரன், போக்குவரத்து எஸ்.ஐ., கோமதி, எஸ்.எஸ்.ஐ., ரகுநாதன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏட்-டுக்கள் முத்துசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி