உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கணவர் இறக்க காரணமானவர் மீது நடவடிக்கை கோரி மனைவி மனு

கணவர் இறக்க காரணமானவர் மீது நடவடிக்கை கோரி மனைவி மனு

தர்மபுரி: விபத்தில் கணவர் இறப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை கோரி, அவரின் மனைவி கார்த்திகா, தர்மபுரி கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளியை சேர்ந்தவர் சரவணன், 27; இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். கடந்த, ஜூலை, 17 அன்று சரவணன் மாணிக்கம்புதுார் அருகே, பைக்கில் சென்றபோது, எதிரே பைக்கில் வந்தவர் மோதியதில், சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை, தர்மபுரி அரசு மருத்து-வமனைக்கும் பின், சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்த நிலையில் ஜூலை, 18 அன்று இறந்தார். புகார் அளித்தும், தொப்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்தை ஏற்படுத்தியவர் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும். இவ்வாறு, அவர் தெரி-வித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ