உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் தினமும் ௧௦ கி.மீ., நடக்கும் மாணவர்கள்

பள்ளி செல்ல பஸ் வசதி இல்லாததால் தினமும் ௧௦ கி.மீ., நடக்கும் மாணவர்கள்

அரூர்: பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லாததால், பாப்பநாயக்கன்வ-லசை கிராம மாணவர்கள், தினமும், 10 கி.மீ., துாரம் வரை பள்-ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பாப்பநாயக்கன்வலசையில், 180க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தீர்த்தமலை அரசு மேல்-நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்கு சென்று வர பஸ் வசதியில்லை. இதனால், மாணவ, மாணவியர் காலை மற்றும் மாலை நேரங்களில், 10 கி.மீ., வரை பள்ளிக்கு நடந்து சென்று வருகின்றனர்.இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:பள்ளிக்கு நடந்து சென்று விட்டு வருவதால், வீட்டிற்கு சென்ற-வுடன் சோர்வு ஏற்படுகிறது. அன்றாட பாடங்களை படிக்க முடிவ-தில்லை. சிலர் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் ஏறிச் செல்கின்றனர். பஸ் விடக்கோரி பல முறை போராடியும் பலன் இல்லை. எனவே, மாணவர்களின் நலன்கருதி, பள்ளி நேரத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு போக்குவ-ரத்து நிர்வாகம், இப்பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பள்ளிக்கு செல்லும் வழியில், வரட்டாறு செல்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்-படும் போது, 3 கி.மீ., துாரம் கூடுதலாக சுற்றி செல்ல வேண்டி-யுள்ளது. வரட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ