உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு

பென்னாகரம், தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, 'தேர்தல் திருவிழா' 'என் வாக்கு என் உரிமை' என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பேரணியில், 150-க்கும் மேற்ப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் துாய்மை காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் தொடங்கி சந்தை வழியாக மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராமிய நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை