உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு டவுன் பஸ் - தனியார் கல்லுாரி பஸ் மோதிய விபத்தில் 19 பேர் காயம்

அரசு டவுன் பஸ் - தனியார் கல்லுாரி பஸ் மோதிய விபத்தில் 19 பேர் காயம்

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, வனப்பகுதி சாலையில் அரசு டவுன் பஸ்--தனியார் கல்லுாரி பஸ் மோதிய விபத்தில், 19 பேர் காயமடைந்-தனர். தர்மபுரி மாவட்டம், சின்னம்பள்ளியை சேர்ந்த பழனிவேல், 33, தர்மபுரி அருகே உள்ள தனியார் கல்லுாரியின் பஸ் ஓட்டுனராக உள்ளார். இவர், சின்னம்பள்ளி பகுதியில் இருந்து நேற்று காலை, 45 மாணவியருடன் தர்மபுரி நோக்கி, நாகாவதி அணை வழியாக வனப்பகுதி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தர்ம-புரியில் இருந்து நாகாவதி அணைக்கு வழித்தடம் எண், 2பி அரசு டவுன் சென்று கொண்டிருந்தது. கம்பைநல்லுாரை சேர்ந்த பாரதி-ராஜா, 27, ஓட்டி சென்றார். உடன் நடத்துனர் செல்வராஜ், 54, உட்பட, 15 பயணிகள் பயணம் செய்தனர்.ஏலகிரி அடுத்த வனப்பகுதியில், 8:50 மணிக்கு பஸ் சென்ற-போது, கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த தனியார் கல்லுாரி பஸ் மீது மோதியது. இதில், அரசு பஸ் ஓட்டுனர் பாரதிராஜா மற்றும் இரு பெண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். கல்-லுாரி பஸ்ஸில் வந்த, 14 மாணவியர் காயமடைந்தனர். அனை-வரும் மீட்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டனர்.பொதுமக்கள் மறியல்விபத்து நடந்த சின்னம்பள்ளி சாலையில், ஏலகிரி முதல் நாகா-வதி அணை வரையிலான, 8 கி.மீ., சாலை மிகவும் குறுகலா-கவும், அதிக வளைவுகள் மற்றும் வனப்பகுதியில் உள்ளது. சாலையை ஒட்டி அதிகளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், எதிரில் வரும் வாகனங்கள் கடந்து செல்ல இடமில்லை. இப்பகு-தியில் ஏற்கனவே பல விபத்துகள் நடந்துள்ளன. இதுவரை சாலை விரிவாக்கம் செய்யவில்லை. இதை கண்டித்து, விபத்து நடந்த இடத்தில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.பென்னாகரம் தாசில்தார் ஆறுமுகம், நல்லம்பள்ளி தாசில்தார் சிவகுமார் மற்றும் பெரும்பாலை போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய-ளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மறி-யலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ