உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பனிமூட்டத்தால் லாரியில் மோதி 2 பேர் பலி

பனிமூட்டத்தால் லாரியில் மோதி 2 பேர் பலி

மேட்டூர்:தர்மபுரி மாவட்டம், பொம்மிடி, ஜாலிபுதுாரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவகுமார், 40. திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். பென்னாகரம், அரசனஹள்ளியைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளி சதீஷ், 30. இவருக்கும் திருமணமாகி, பெண் குழந்தை உள்ளது. இருவரும், 20 நாட்களுக்கு முன், கட்டட வேலைக்காக கோவை சென்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இருவரும், கோவையில் இருந்து வீட்டிற்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். கோவையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி, மேட்டூர் ஆர்.எஸ்., அருகே பழுதாகி நின்றிருந்தது.அந்த வழியாக, நேற்று காலை, 6:00 மணிக்கு சென்ற போது, பனிமூட்டத்தால் காஸ் சிலிண்டர் லாரி நிற்பது தெரியாமல், அதன் பின்னால் பைக் மோதியது. இதில், சிவகுமார் சம்பவ இடத்திலும், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சதீஷும் இறந்தனர். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !