உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிறுமிக்கு தொல்லை பெயின்டருக்கு 20 ஆண்டு

சிறுமிக்கு தொல்லை பெயின்டருக்கு 20 ஆண்டு

தர்மபுரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தர்மபுரியை சேர்ந்த, பெயின்டர் பார்த்திபன், 27. இவர், 2021 மார்ச்சில், 15 வயது பள்ளி சிறுமியை காதலிப்பதாக, ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், பார்த்திபனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 13,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை