ஏரியில் விடப்பட்ட 20,000 மீன் குஞ்சுகள்
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சோமலிங்க ஐயர் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. தமிழக அரசு உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில், மீன் குஞ்சுகளை வளர்க்க உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், 200 ஹெக்டேர் பரப்பளவில், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காரிமங்கலம் முக்குளம் ஊராட்சியில் சோமலிங்க ஐயர் ஏரியில், 20,000 மீன் குஞ்சுகளை தர்மபுரி, தி.மு.க., எம்.பி., மணி, மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆகியோர் ஏரியில் விட்டனர்.