உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எம்.சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

ஓசூர், ஓசூர், தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த இரு டிப்பர் லாரிகளில் சோதனை செய்தபோது, ஒரு லாரியில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 8 யூனிட் எம்.சாண்ட் மற்றும் மற்றொரு லாரியில், 4 யூனிட் எம்.சாண்ட் கொண்டு செல்வது தெரிந்தது.லாரிகளை பறிமுதல் செய்த தாசில்தார் குணசிவா, ஹட்கோ போலீசில் ஒப்படைத்தார். அவரது புகார் படி, ஹட்கோ போலீசார் லாரிகளின் டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை பஸ் ஸ்டாப்பில், அப்பகுதி வி.ஏ.ஓ., செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் காலை வாகன சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து, தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிற்கு, 4 யூனிட் எம்.சாண்ட் கொண்டுசெல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த வி.ஏ.ஓ., செந்தில்குமார், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை