உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாடகை காரை விற்ற 3 வாலிபர்கள் கைது

வாடகை காரை விற்ற 3 வாலிபர்கள் கைது

தர்மபுரி, தர்மபுரி அடுத்த ஏ.கொல்லஹள்ளியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 35. இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் செய்கிறார். மதிகோண்பாளையத்தை சேர்ந்த முகேஷ், 27, என்பவர் வாடகைக்கு கார் கேட்டுள்ளார். கடந்த, 11ல் மதியம், 3:00 மணிக்கு பிரவீன்குமார் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர், முகேஷியிடம் இனோவா காரை கொடுத்துள்ளனர். 2 நாட்கள் கழித்து முகேஷியிடம் கார் கேட்டபோது, எடுத்து வருவதாக கூறியவர், மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். விசாரித்ததில் முகேஷ் கோடுப்பள்ளத்தை சேர்ந்த முனியப்பன், 25, என்பவருடன் மேட்டுப்பாளையம் சென்று, முகமது ரியாஸ், 26, பாதுார்ஷா ஆகியோரிடம், 2 லட்சம் ரூபாய்க்கு அக்காரை விற்றது தெரிந்தது. பிரவீன்குமார் புகார் படி, தர்மபுரி போலீசார் வழக்குப்பதிந்து, முகேஷ், முனியப்பன் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். தலைமறைவான பாதுார்ஷாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !