மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
19-May-2025
ஒகேனக்கல் :மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் குழுவாக இணைந்து, ஒகேனக்கல்லில் மொத்த, சில்லறை மீன் விற்பனை நிலையங்கள், மீன் வறுவல் கடைகள், சில்லி சிக்கன் கடைகள் மற்றும் உணவகங்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 2 மொத்த விற்பனை நிலையத்திலிருந்து தரமற்ற, 30 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி குழி தோண்டி புதைத்தனர். உணவகங்களில் செயற்கை நிறமூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வில், மீன் மொத்த விற்பனை நிலையங்களில், 2 கடைகள் மற்றும் மீன் வறுவல் கடைகள், 2 என, 4 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் என, 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது, ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நந்தகோபால், சரண்குமார், திருப்பதி மற்றும் மீன்வளத்துறை மீன்வள உதவியாளர்கள் மாதேஷ் மற்றும் ஒகேனக்கல் எஸ்.ஐ. பரமேஸ்வரன் உடனிருந்தனர்.
19-May-2025