டாக்டர், 2 மாணவியர் உட்பட 4 பேர் மாயம்
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, மஞ்சநாயகனஹள்ளியை சேர்ந்தவர் வளர்மதி, 25. இவர் பி.எச்.எம்.எஸ்., படித்து விட்டு, வீட்டில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். கடந்த, 24 அன்று மாயமானார். அதேபோல், அரகாசனஹள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 24 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.பென்னாகரம் அடுத்த, பளிஞ்சரஹள்ளியை சேர்ந்தவர் சூர்யா, 19. இவரது கணவர் ராஜாகொள்ளளியை சேர்ந்த தங்கராஜ். தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சூர்யா கடந்த, 24 அன்று மாயமானார். புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர். பாலக்கோட்டை சேர்ந்த, 17 வயது மாணவி, தர்மபுரியிலுள்ள, தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., மைக்ரோபயாலஜி முதலாமாண்டு சேர்ந்திருந்தார். கடந்த, 23 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, மதிக்கோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.