மேலும் செய்திகள்
இந்தியன் வங்கி என்.ஜி.ஓ., மாயம்
21-Dec-2025
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே கொனப்-பள்ளம் காலனியை சேர்ந்த நவின், 17. இவர் இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக, நவீன் பெற்றோரிடம் மொபைல் அல்லது பைக் வாங்கி தர வேண்டுமென அடம்பிடித்து, பள்ளிக்கு செல்-லாமல் இருந்து வந்தார். கடந்த, 9 அன்று பள்-ளிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். * தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த உம்மியம்-பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி வீர-மணி, 27. இவர் மனைவி வினோதினி, 24. தம்ப-திக்கு தியா ஸ்ரீ, 4, லித்திக் வருண், 2 என இரு குழந்தைகள். கடந்த, 7ம் தேதியன்று வீரமணி - வினோதினி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த, 9ம் தேதியன்று இரவு, 8:00 மணிக்கு குழந்தைக-ளுடன் வீட்டை விட்டு சென்ற வினோதினி மாய-மானார். வீரமணி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Dec-2025