மேலும் செய்திகள்
2 இளம்பெண் மாயம்
29-Oct-2026
தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்த, 14 வயது மாணவி அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்த மாணவி, கடந்த, 24ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார்படி பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.காரிமங்கலம் நடுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன், இவரது மனைவி கவியரசி, 23, தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தம்பதிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக தனியாக வசிக்கின்றனர். கடந்த, 24ம் தேதி வெளியில் சென்ற கவியரசி வீடு திரும்பவில்லை. காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.பென்னாகரம் அடுத்த கெட்டூரைச் சேர்ந்த, 17 வயது மாணவி தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி வீட்டில் இருந்து மாயமானார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரியைச் சேர்ந்த கதிரவன் மனைவி சுவேதா, 27, தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, 24ம் தேதி வெளியில் சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Oct-2026