உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காரில் ‍கொண்டு வந்த 50 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

காரில் ‍கொண்டு வந்த 50 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சுகாதார ஆய்வாளர் விக்னேஷ், உதவியாளர் மோகன் அஸ்வின் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கடத்துார் - பொம்மிடி மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் அரசால் தடை செய்யப்பட்ட, 50 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ