உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / என்.எம்.எம்.எஸ்., தேர்வில் மாநில அளவில் 5ம் இடம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வில் மாநில அளவில் 5ம் இடம்

தர்மபுரி: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்-தொகை திட்டத்தில் (என்.எம்.எம்.எஸ்) அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு, தர்ம-புரி மாவட்டத்தில், 5,901 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்-பித்திருந்தனர். இதில் கடந்த பிப்., 22 அன்று தேர்வில், 36 மாண-வர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில், 5,865 மாணவர்கள் தேர்வெ-ழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், தர்மபுரி டவுன் அவ்-வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 16, கோவிலுார் அரசு நடுநிலைப்பள்ளியில், 9 மாண-வர்கள் என, மாவட்டத்தில், 184 பள்ளிகளில், 387 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், திருநெல்வேலியில், 508 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் முதலிடமும், 479 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சேலம், 2ம் இடத்திலும், 470 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தூத்துக்குடி, 3ம் இடமும், 414 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மதுரை, 4ம் இடமும், 387 மாணவர்கள் தேர்ச்சியுடன் தர்-மபுரி மாவட்டம் தமிழக அளவில், 5ம் இடமும் பெற்றுள்ளது. இதில், மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரி-யர்களை, சி.இ.ஓ., ஜோதிசந்திரா பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ