உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெட்டிஷன் மேளாவில் 76 மனுக்களுக்கு தீர்வு

பெட்டிஷன் மேளாவில் 76 மனுக்களுக்கு தீர்வு

'தர்மபுரி, தர்மபுரி, எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், 76 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் தீர்வு காணப்படாத பல்வேறு வழக்குகளில் சுமுகமாக தீர்வு காணும் வகையிலும், புதிய புகார்களை விரைந்து முடிக்கும் வகையிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று, பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறும் வகையில் பெட்டிஷன் மேளா எனும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடந்த முகாமில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களின் மனுக்களை, ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ,.,க்கள் விசாரித்தனர்.இதில், பொதுமக்கள் வழங்கிய, 76 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, 76 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு, வழக்குகளை போலீசார் முடித்து வைத்தனர். நேற்று புதிதாக வழங்கப்பட்ட, 38 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை