மேலும் செய்திகள்
எலக்ட்ரிக் டூவீலர் தீப்பற்றி எரிந்து நாசம்
15-Aug-2024
சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் கைது
05-Aug-2024
தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரபு, 42; இவர், சொந்த பணியாக, நேற்று போர்ட் காரில் சேலம் சென்று விட்டு, தர்மபுரி வழியாக, மீண்டும் ஓசூர் சென்றார். மதியம், 2:30 மணிக்கு தர்மபுரி டவுன் நேதாஜி பைபாஸ் சாலையில் சென்றபோது, காரின் முன் பகுதி திடீரென தீ பிடித்தது. காருக்குள் இருந்த பிரபு உடனடியாக, கதவை திறந்து வெளியே வந்தார். தர்மபுரி தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து, காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில், காரில் 'ஏசி' ஆன் செய்தபோது, தீ பிடித்ததாக விசாரணையில் தெரியவந்தது. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Aug-2024
05-Aug-2024