மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் பதுக்கியவர் கைது
02-Oct-2024
தர்மபுரி: பென்னாகரம் அடுத்த, பெரும்பாலை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, தின்னுார் பஸ் ஸ்டாப் அருகே, சாக்கு முட்டை வைத்திருந்தவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் பிடித்து சாக்குமூட்டையை சோதனை செய்தபோது அதில், மது பாட்டில்கள் இருந்ததையும், அவர் பென்னாகரம் தாலுகா, மூங்கில் மடுவு அடுத்த கொண்ட-தண்டுகாடு பகுதியை சேர்ந்த குமார், 47, என்பதும் தெரியவந்-தது. மேலும் அவர், மதுவில் அதிக போதைக்காக ஊமத்தங்-காயை இடித்து, அதன் கரைசலை, மது பாட்டில்களில் கலந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த, 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.
02-Oct-2024