உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அப்துல் கலாம் நினைவு தினம்

அப்துல் கலாம் நினைவு தினம்

தர்மபுரி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 10ம் ஆண்டு நினைவு தினம், தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர் அசோசியேஷன் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி, தர்மபுரி எஸ்.வி., சாலையில் வைத்திருந்த, அப்துல் கலாம் உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்-தினர். இதில், சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, பொருளாளர் காந்தன் கிருஷ்ணன். மற்றும் ஒலி, ஒளி அமைப்பா-ளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.* பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் முன்பு, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ராணுவ வீரர்கள், அரிமா சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஸ் ஸ்டாண்ட் முன் அமைத்திருந்த டாக்டர் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மேக்கலாம்பட்டி ஏரியில் மரக்கன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !