உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டாஸ்மாக்கை அகற்றக்கோரி பா.ம.க.,வினர் போராட்டம்

டாஸ்மாக்கை அகற்றக்கோரி பா.ம.க.,வினர் போராட்டம்

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, திண்டல் பஞ்., குட்டூரில் கடந்த வாரம் புதிதாக, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பா.ம.க.,வினர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க., ஒன்றிய செயலாளர் சஞ்சீவன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் அன்பழகன், உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சிவசக்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜசேகர் பேசினார். தொடர்ந்து டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பெண்கள் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை