மேலும் செய்திகள்
விபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்
02-Sep-2025
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடத்துார் நகரத்திற்கு, இன்று, 17ல், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசாரத்திற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வருகை தர இருந்தார்.இதையொட்டி, அ.தி.மு.க.,வினர் ஒடசல்பட்டி கூட்ரோடு முதல் கடத்துார் நகரம் முழுவதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் இ.பி.எஸ்.,சை வரவேற்று விளம்பர பதாகைகள் சாலையோரங்களில் வைத்திருந்தனர். அவரது வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டு வரும், 28, 29ல் வருவதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, சாலை ஓரங்களிலும் நகரத்தின் முக்கிய பகுதிகளிலும் வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற கடத்துார் போலீசார், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க.,வினர் அனைத்து விளம்பர பதாகைகளையும் அகற்றி லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வருகை ஓரிரு நாட்கள் தள்ளி வைத்திருந்தால் பதாகைகள் எடுக்க வேண்டிய சூழல் இருந்திருக்காது. இன்னும், 10 நாட்கள் இருப்பதால், அகற்ற வேண்டிய கட்டாயம். இதனால் கழற்றப்பட்ட பல பதாகைகள் கிழிந்து விட்டது. மீண்டும் புதிதாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.
02-Sep-2025