மேலும் செய்திகள்
தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் வழங்கல்
09-Sep-2025
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டையில் மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை பஞ்., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும், ஊத்தங்கரை வெங்கடதம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உப்பாரப்பட்டி, கெங்கப்பிரமப்பட்டி, நொச்சிப்பட்டி, கீழ்குப்பம், ஊராட்சிகளை சார்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.ஊத்தங்கரை, அ.தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., அசோக்குமார் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க., கழக துணை பொது செயலாளர் முனுசாமி பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.பூத் கமிட்டி பொறுப்பாளர் ஐ.டி., விங்., சேலம் ரமேஷ், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் வேங்கன், வேடி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ஊத்தங்கரை நகர செயலாளர் ஆறுமுகம், சிறுபான்மை பிரிவு பியாரே ஜான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Sep-2025