அட்சய திரிதி விற்பனைநகைக்கடைகளில் ஜோர்
அரூர்அரூரில், அட்சய திரிதியையொட்டி, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, நான்குரோடு,திரு.வி.க., நகர் ஆகிய பகுதிகளில் செயல்படும் அனைத்து நகைக்கடைகளும் வழக்கத்தை விட, நேற்று காலையில் முன்கூட்டியே திறக்கப்பட்டு இருந்தது.ஏற்கனவே, அட்சய திரிதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நகைக்கடைகள் பல சிறப்பு சலுகைகளை வழங்கி இருந்தது. இந்நிலையில், தங்கம் வாங்க, நகைக்கடைகளில் மக்கள் குவிந்ததால், கூட்டம் அலைமோதியதுடன், விற்பனை படுஜோராக நடந்தது.