உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு

தர்மபுரி: சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூ-தியம், 7,850 ரூபாய் வழங்க, ஓய்வூதியர் சங்கத்தினரால் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்-கத்தின் மாவட்ட முதல் மாநாடு தர்மபுரி, சி.ஐ.டி.யூ., அலுவல-கத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட அமைப்பு குழு கன்-வீனர் அங்கம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புக்-குழு உறுப்பினர் கருணாநிதி வரவேற்றார்.அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி துவக்கி வைத்து பேசினார். இதில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூ-தியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதி-யர்கள் இறந்தால் ஈமச்சடங்கு நிதியாக, 25,000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்ச், -28ல் மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது குறித்து, முடிவு செய்யப்பட்டது. நிர்வாகி மல்லிகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை