உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அர்ஜூனன் தபசு தெருக்கூத்து

அர்ஜூனன் தபசு தெருக்கூத்து

நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, ஏலகிரி கிராமத்தில், கடந்த ஆனி மாதம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையொட்டி, கோவில் வளாகத்தில், தெருக்கூத்து நாடகம் கடந்த, 5 நாட்களாக நடக்கிறது. நேற்று, அர்ஜூனன் தபசு நாடகம் நடந்தது. இதில், பி.கொல்லப்பட்டியை சேர்ந்த நாடக கலைஞர்கள் பங்கேற்றனர். அர்ஜூனன் வேடமனிந்த நாடக கலைஞர், விவசாயத்திற்கு போதிய மழை வேண்டியும், கிராம மக்கள் பூரண நலம் வேண்டியும், கருடாழ்வாரை வேண்டி, மரத்தின் மீது நின்று வழிபாடு செய்தார். தொடர்ந்து, கருடாழ்வார் தரிசனத்திற்கு பின், மரத்திலிருந்து கீழிறங்கி அருளாசி வழங்கினார். திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ