உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது

ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி பல லட்சம் ரூபாய் தப்பியது

மொரப்பூர்:மொரப்பூர் அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியில், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம்., மையம், 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்., மையத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணிக்கு ஏ.டி.எம்., மையத்திற்கு சென்ற பொதுமக்கள் சிலர், ஏ.டி.எம்., இயந்திரத்தின் முன்பக்கம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மொரப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !