உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி

பெருமாள் கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி

.பாப்பிரெட்டிப்பட்டி, : பொம்மிடி அடுத்த கதிரிபுரத்தில், பொம்மிடி - அரூர் மெயின் ரோட்டில் கவரமலை வனத்தையொட்டி பழமையான லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் உள்ளது. கோவில் பூசாரி ரவி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அன்றிரவு ஸ்கூட்டியில் வந்த, 2 பேர் கோவில் கேட்டின் பூட்டை உடைத்தனர். சத்தம் கேட்டு மக்கள் வந்தபோது, அவர்கள் தப்பினர். இதனால் கோவிலில் உள்ள நகை, உண்டியல் பணம் தப்பியது. அறங்காவலர் பழனி புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன் அப்பகுதியிலுள்ள பச்சையம்மன் கோவிலில் நகை திருடு போனது. அதே பகுதியில் ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த கந்துவட்டிக்காரரிடம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. வாசிக்கவுண்டனுாரில் ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ