உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க கிராம மக்களிடையே விழிப்புணர்வு

நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைக்க கிராம மக்களிடையே விழிப்புணர்வு

அரூர், தர்மபுரி வனக்கோட்டம், அரூர் வனச்சரக வனக்காவல் எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.வனம் மற்றும் வனஉயிரினங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் வனத்துறை அலுவலர்களிடம், இன்று, செப்., 10ம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதை வழங்கினர். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சித்தேரி பஞ்., தோல்துாக்கி, கீரைப்பட்டி பஞ்., வள்ளிமதுரை மற்றும் பட்டுக்கோணம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களில் மக்களிடம், அரூர் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை