இலவச கண் சிகிச்சை முகாமில் விழிப்புணர்வு
அரூர்:அரூர் அடுத்த சிட்லிங்கிலுள்ள மலைவாழ் மக்கள் மருத்துவமனையில், நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சிட்லிங் மலைவாழ் மக்கள் மருத்துவமனை, தர்மபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில், 230 நபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில், 67 பேர் கண்புரை அறுவைச் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமில், அறுவைச் சிகிச்சைக்கு பின், கண் பாதுகாப்பு சொட்டு மருந்து போடும் முறைகள் மற்றும் மொபைல் போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மலைவாழ் மக்கள் மருத்துவமனை மருத்துவர் பிரவீன், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அபிஷேக், அஜய்வெங்கட், ரவிக்குமார், ஆர்த்தி, தீர்த்தமலை அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் (ஓய்வு) கலையரசன் உள்ளிட்ட குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர்.