மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
01-Sep-2024
போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணிபாலக்கோடு, செப். 27-போதை பழக்கத்திற்கு எதிரான, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், போதை பழக்கத்திற்கு எதிரான, விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் செல்வராணி தலைமையில் நடந்தது.இதில், பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன், போதை பழக்கத்திற்கு எதிரான, விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து, மாணவர்களிடையே பேசுகையில், ''கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு, போதை பழக்கமே காரணமாக உள்ளது. இதனால், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் போதை இல்லா சமுதாயம் அமைக்க பாடுபட வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, போதை இல்லா சமுதாயம் படைப்பேன் என, மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில், பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், துணை முதல்வர் ரவி, கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முருகன், சந்தோஷ்குமார் செய்திருந்தனர்.
01-Sep-2024