உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாசகர்களுக்கு அடிப்படை வசதி

வாசகர்களுக்கு அடிப்படை வசதி

தர்மபுரி, நுாலக வாசகர்கள் வசதிக்காக, தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், அப்படை வசதிகளை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். மைய நுாலக முதல்நிலை நுாலகர் மாதேஸ்வரன் வரவேற்றார். பணி நிறைவு பெற்ற நுாலகர் பச்சை முன்னிலை வகித்தார். இதில், தர்மபுரி மாவட்ட மைய நுாலகம் மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் பயன்பாட்டிற்காக, தர்மபுரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 12.50 லட்சம் ரூபாய் மூலம், கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்க கட்டடம் ஆகியவற்றை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி