உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெற்றிலை விலை உயர்வு

வெற்றிலை விலை உயர்வு

பாப்பிரெட்டிப்பட்டி,: கடத்துாரில், வாரந்தோறும் ஞாயிற்று கிழமை வெற்றிலை சந்தை நடக்கிறது. அய்யம்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, அஸ்திகிரி உள்-ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்தனர். கடந்த வாரம், 128 கட்டு கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை, 4,000 முதல்,7,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று, 4,000 முதல், அதிகபட்சமாக, 9,000 ரூபாய் வரை விற்-றது. கடந்த வாரத்தை காட்டிலும், 2,000 ரூபாய் விலை கூடுத-லாக விற்றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வெற்றிலை வாங்க வந்திருந்தனர். நேற்று, 2.34 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்பனை நடந்ததாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி