வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் வெற்றிலை வாரச்-சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்-றிலை வாங்க, விற்க வியாபாரிகள் வருகின்றனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை, 12,000 முதல் அதிகபட்சமாக, 16,000 ரூபாய் வரை விற்-றது. நேற்று ஆரம்ப விலை, 10,000 முதல் அதிகபட்சமாக, 14,000 ரூபாய் வரை விற்றது. வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட, 2,000 ரூபாய் விலை சரிந்தது. இதில், 26க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகள் விற்றதில், 3.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது, என வியாபாரிகள் தெரிவித்தனர்