மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: rசிவகங்கை
26-May-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - தளி சாலையில், டி.வி.எஸ்., நகர் அருகே ராம்ஜி காலனியில் உள்ள பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர், 25ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. தலைவர் ராம்ஜி ரத்தினகுமார் தலைமை வகித்தார். அதிகாலை, 5:30 மணிக்கு பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு அபிஷேக பூஜை, காலை, 6:00 மணிக்கு நாம ஜெபம், 6:30 மணிக்கு வினோத்நாராயண சுவாமி குழுவினரின் நாதஸ்வரம், தவில் இன்னிசை, 8:05 மணிக்கு மங்களாரத்தி, 9:30 மணிக்கு ராம்ஜி பஜனை குழு தலைவர் குப்புசாமி தலைமையில் பஜனை நிகழ்ச்சி நடந்தது.துருவநாராயணன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, காலை, 11:00 மணிக்கு பரதாலயா பள்ளி குரு உமாமகேஸ்வரி தலைமையில், மாணவியர் லட்சுமி ஸ்ரீ, காம்யா, தன்யா, நிகிதா, ஹஸ்மிதா, ஓவியா ஆகியோர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, 11:50 மணிக்கு, பேராசிரியர் கனகவேல் ராஜனின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திர் பொதுச்செயலாளர் அண்ணாமலை வீரப்பன் நன்றி கூறினார்.
26-May-2025