பாரத் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.55 லட்சம் வழங்கி பாராட்டு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். மாணவி அருணா, 500க்கு, 497 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில், 2ம் இடத்திலும், பள்ளி அளவில் முதலிடத்திலும், இவாஞ்சிலின் கிறிஸ்டி, 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில், 2ம் இடமும், மாணவியர் சின்மயி, திலோத்தம்மா, மாணவன் பிரவீன் ஆகியோர், 491 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடத்தையும் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவி அருணாவை பாராட்டி, பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி, ஒரு லட்சம் ரூபாயை காசோலையாக வழங்கினார். 2ம் இடம் பெற்ற இவாஞ்சிலின் கிறிஸ்டிக்கு, 25,000 ரூபாய், 3ம் இடம் பெற்ற சின்மயி, திலோத்தமா, மாணவன் பிரவீன் ஆகியோர்களுக்கு தலா, 10,000 ரூபாய் வழங்கி பாராட்டினார். இதில், பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி மணி, பாரத் கல்வி அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் சந்தோஷ், பள்ளி முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர் பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.