உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாக்கடை கால்வாய் பணிக்கு பூமி பூஜை

சாக்கடை கால்வாய் பணிக்கு பூமி பூஜை

பாலக்கோடு, பாலக்கோடு டவுன் பஞ்., 8வது வார்டில் உள்ள, கனம்பள்ளி தெரு முதல் மந்தைவெளி வரையிலும், 2வது வார்டில் உள்ள மாயன் கடை முதல் செங்காளியம்மன் கோவில் வரையிலும் உள்ள தெருக்களுக்கு சாக்கடை கால்வாய் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கு, நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் முரளி தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.டவுன் பஞ்., செயல் அலுவலர் இந்துமதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி, டவுன் பஞ்., கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ