ஓசூரில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட டி.வி.எஸ்., நகர், ஜவகர் நகர், அம்பாள் நகரில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, ஜவகர் நகரில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து, 38.9 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, ஓசூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், எஸ்.பி.எம்., காலனியில் கலைஞர் நுாலகம் மற்றும் ரேஷன் கடை விரிவாக்கம் செய்யும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தி.மு.க., பகுதி பொறுப்பாளர் ராஜா, வார்டு செயலாளர் சையது அபுதாகீர் உட்பட பலர் பங்கேற்றனர்.