பெரிய வெங்காயம் கிலோ ரூ.௮௦
பெரிய வெங்காயம்கிலோ ரூ.௮௦தர்மபுரி, நவ. 17-தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 5 உழவர்சந்தைகளில், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம், 64 ரூபாய் என விற்றது. பின், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ, 75 ரூபாய்க்கும், நேற்று, 80 ரூபாய் எனவும் விற்பனையானது. பெரிய வெங்காயத்தின் இந்த தொடர் விலை உயர்வால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.