மேலும் செய்திகள்
தீவிரவாதிகள் தாக்குதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி
24-Apr-2025
பாப்பிரெட்டிப்பட்டி:-காஷ்மீர், பஹல்காமில், 27 சுற்றுலா பயணிகளை, தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இறந்தவர்களுக்கு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., கிழக்கு மண்டலம் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டி, பா.ஜ., கிழக்கு மண்டல பொறுப்பாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல் தலைவர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்பட டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு அதற்கு மலர் துாவி, பா.ஜ.,வினர் மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், அந்த பேனரில் பிரிவினைவாதத்தை துாண்டும் விதமாக வாசகங்கள் உள்ளதாக கூறி, பேனரை அப்புறப்படுத்தினர். இதனால் பாப்பிரெட்டிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
24-Apr-2025