உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கல்லுாரியில் ரத்த தான முகாம்

கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரூர், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது. அரூர் அரசு கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். கல்லுாரியின், போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் குமார், அரூர் ரோட்டரி சங்க தலைவர் நாராயணன், செயலாளர் தமிழரசன், பொருளாளர் கோபிநாத் ஆகியோர் பேசினர். இதில், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன், 68 யூனிட் ரத்தம் தானம் செய்தனர். ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோபிநாத் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை