உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா

குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா

ஊத்தங்கரை: ஊத்தங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில், குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா, பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமையில் நேற்று நடந்தது.வித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். குன்றக்குடி அடிகளாரின் நுாற்றாண்டு விழா மற்றும் படம் திறப்பு விழா நடந்தது. தொடர்ந்து, ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 35 ஆண்டுகளாக பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவராக பணியாற்றிய தேவராசனுக்கு பாராட்டு விழா நடந்தது.இதில், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி, அ.தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது, ஊத்தங்கரை அரிமா சங்க தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை