மேலும் செய்திகள்
தர்மபுரியை புறக்கணித்ததா தி.மு.க., அரசு?
18-Aug-2025
பென்னாகரம், பென்னாகரத்தில் புதியதாக திறக்கப்பட்ட மகப்பேறு மருத்துவ கட்டடத்தை, தர்மபுரி கலெக்டர் நேற்று பார்வையிட்டு, அங்கு பணியில் சிறந்து விளங்கும் ஊழியர்களுக்கு, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 40 படுக்கை வசதி கொண்ட, 3 அடுக்கு மகப்பேறு மற்றும் சிசு வளர்ப்பு கட்டடத்தை கடந்த ஆக., 17ல், தர்மபுரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் அக்கட்டடத்தை பார்வையிட்டு, அங்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குனர் சாந்தி, பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
18-Aug-2025