உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

மாரண்டஹள்ளி, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த செம்மனஹள்ளியை சேர்ந்தவர் கார்த்திக், 28. கூலித்தொழிலாளி. இவர் மனைவி நந்தினி. இவர்களுக்கு, 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு மனைவி மற்றும் மாமியாருடன் செங்கல் சூளைக்கு கார்த்திக் வேலைக்கு சென்றுள்ளார். அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை, செங்கல் சூளை அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அருகே பிளாஸ்டிக் தார்ப்பாயில் தேக்கி வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை, 108 அவசரகால ஆம்புலன்சில், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை