உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி

ஜி.ஹெச்.,ல் துாய்மை பணி

ஜி.ஹெச்.,ல் துாய்மை பணிபாப்பிரெட்டிப்பட்டி, அக். 11---பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நேற்று தலைமையாசிரியர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடந்தது. திட்ட அலுவலர், முதுகலை ஆசிரியர் சக்திபால் மேற்பார்வையில், அரசு மருத்துவமனை வளாகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வட்டார கல்வி மையம், அரசு ஆண்கள், பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கருவூலம், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, பனை விதை நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் சிவமணி, உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை