கட்டட தொழிலாளி சாவு
கரூர், கரூர் அருகே, துாங்கி கொண்டிருந்த கட்டட தொழிலாளி, திடீரென உயிரிழந்தார்.கேரளா மாநிலம், திருச்சூர் மணப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகரன், 56; கட்டட தொழிலாளி. இவர், கரூர் அருகே செட்டிப்பாளையம் பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 27ல் சுக்காலியூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் வேலை முடிந்த பிறகு, துாங்க சென்றுள்ளார். ஆனால், துாக்கத்திலேயே அவர் உயிரிழந்தார். இவருக்கு, இதயநோய் இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து, ஜெய சேகரனின் மகன் சஜேஸ், 28; கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.