கூட்டுறவு துறை வாரவிழா இலவச மருத்துவ முகாம்
கூட்டுறவு துறை வாரவிழாஇலவச மருத்துவ முகாம்தர்மபுரி, நவ. 17-தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறையின், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கியில் நேற்று, இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில், கூட்டுறவு துறை வங்கி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில், ரத்த அழுத்தம், சளி, இருமல் காய்ச்சல், பல் மருத்துவம் போன்ற பல்வேறு இலவச மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. நோயாளிகளுக்கு மருந்து மற்று மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. தேவைப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தர்மபுரி தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் சரவணன். தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, கூட்டுறவு நகர வங்கியின் துணை பதிவாளர் பிரேம், நிர்வாகிகள் அன்பழகன், செந்தில்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.