உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25க்கு விற்பனை

கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.25க்கு விற்பனை

சூளகிரி: சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் சுற்றுவட்டாரத்தில், 3,000 ஏக்கருக்கு மேல், ஆண்டு முழுவதும் கொத்தமல்லி சாகுபடி நடக்கிறது. இதை, 45 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால், விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர். சூளகிரியில் பெரிய அளவில் இயங்கும் கொத்தமல்லி மார்க்கெட்டில் இருந்து, சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.கொத்தமல்லி சாகுபடி குறைந்து, விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஓசூர் உழவர் சந்தையில் நேற்று ஒரு கட்டு, 15 முதல், 20 ரூபாய் வரையும், ஒரு கிலோ, 80 ரூபாய்க்கும் விற்பனையானது. வெளிமார்க்கெட்டில் ஒரு கட்டு, 25 ரூபாய், கிலோ, 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.இது குறித்து, சூளகிரி பகுதி விவசாயிகள் கூறியதாவது: இம்மாத துவக்கத்தில், விவசாயிகளிடம் ஒரு கட்டு கொத்தமல்லி, 5 ரூபாய்க்கும் குறைவாக வாங்கி கடைகளில், 10 ரூபாய் வரை விற்றது. தற்போது சாகுபடி குறைந்த நிலையில், விவசாயிகளிடம், 10 முதல், 13 ரூபாய் வரை வாங்கி வருகின்றனர். வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை