சாவிலும் இணை பிரியாத தம்பதி ஓசூர், டிச. 2-
சாவிலும் இணை பிரியாத தம்பதிஓசூர், டிச. 2-தேன்கனிக்கோட்டை அருகே, வயதான தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மேக்கலகவுண்டனுாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 90, விவசாயி; இவரது மனைவி ராமக்கா, 75; தம்பதிக்கு இரண்டு மகன், 5 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.தம்பதியர் மட்டும் தனியாக வாழ்ந்தனர். ஓராண்டாக உடல்நிலை பாதித்து வீட்டில் இருந்தனர். இதனால் மகன்கள் கவனித்து வந்தனர். பெரிய மகன் சீனிவாசன், அவரது மனைவி வெங்கடலட்சுமி, நேற்று முன்தினம் இரவு வழக்கமபோல், கஞ்சி வைத்து குடிக்க வைத்து, படுக்கையில் படுக்க வைத்து சென்றனர்.நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது, இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழந்தது, அக்கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இருவரது உடலையும் உறவினர்கள் மேள, தாளத்துடன் கொண்டு சென்று, அடக்கம் செய்தனர்.