பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்ட பயிற்சி முகாம்
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், பயிர் மதிப்பீட்டு ஆய்வு மற்றும் பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து, 2 நாள் புத்துாட்ட பயிற்சி முகாம் நடந்தது. கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குனர் சிவராமன் தலைமை வகித்தார். இதில், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர், ஊழியர்களுக்கு பயிர் மதிப்பீட்டாய்வு திட்டம், திருந்திய பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ஆகியவற்றிற்கான பயிர் அறுவடை பரிசோதனை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அரூர் வேளாண் உதவி இயக்குனர் இளங்கோ, புள்ளியியல் ஆய்வாளர்கள் ஞானம், சக்திவேல், சரஸ்வதி, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.